science

img

விக்ரம் சாராபாய் - 100

பெங்களூரு, ஆக.12- இந்திய விண்வெளித் திட்டத்தின்  தந்தை என்று போற்றப்படும் விக்ரம் அம்பாலால் சாராபாயின் 100ஆவது பிறந்த நாளான ஆகஸ்ட் 12 திங்க ளன்று அவரைக் கௌரவிக்கும் வித மாக விஞ்ஞானிகள் கொண்டாடினர். சந்திரயான், மங்கள்யான் போன்ற விண்கலன்களை வெற்றிகரமாகச் செலுத்தி விண்வெளித் துறையில் உலகளவில் பெரும் சாதனைகளைப் புரிந்துவரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) மிகப்பெரிய முன்னோடியாகத் திகழ்ந்தவர் இஸ்ரோவின் தந்தை என்று போற்றப்படும் டாக்டர் விக்ரம் சாராபாய். ஆகஸ்ட் 12 அவருக்கு 100 ஆவது பிறந்தநாள்.

விக்ரம் சாராபாய் கடந்த 1919ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி அகமதா பாத்தில் பிறந்தார். வசதியான குடும் பத்தில் பிறந்திருந்தாலும், தொழில் துறையில் ஈடுபடாமல் அவரது ஆர்வம் முழுவதும் இயற்பியலின் மீதே இருந்தது. இங்கிலாந்தில் இயற்பியல் ஆராய்ச்சியை முடித்து டாக்டர் பட்டம் பெற்றார். அதன் பின்னர் அகமதாபாத் தில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வ கத்தை 1947ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி நிறுவினார். பின்னர், குடும்பத்தினருடன் சேர்ந்து தனது 28ஆவது வயதிலேயே ஆராய்ச்சி அறக் கட்டளை ஒன்றையும் நிறுவினார். இந்தியாவின் முதல் செயற்கைக் கோளான ஆரியபட்டா விண்ணில் ஏவப் பட்டதற்கு முழுக் காரணமே இவர் தான். எஸ்ஐடிஇ(SITE) எனப்படும் ‘செயற் கைக்கோள் உதவியுடன் தொலைக் காட்சியில் பயிற்றுவிக்கும் முயற்சி’ மூலம் 24,000 இந்திய கிராமங்களி லுள்ள 50 லட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச் செல்ல உதவினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை விரிவாக்கம் செய்தார். பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ள இவர், 1971ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி உயிரி ழந்தார்.